×

தவறுகளை உணர்ந்துவிட்டேன்; நடிகை ஓபன் டாக்

விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சமீபத்தில் அவர் படகு ஓட்டும் பயிற்சியை கேரளாவில் பெற்றார். இந்நிலையில் தனது தவறுகளை உணர்துவிட்டதாக  ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

கடந்த ஆண்டுதான் நான் எவ்வளவு வலிமையானவள் என்பதை எனக்கு உணர்த்தி இருக்கிறது. எனது லட்சியங்களை அடைவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் என்னை பெருமை பட வைத்தது. அதன் பிற்பகுதியை நோக்கிநடை போட்டபோது அதற்காக எனது நேரங்களை நான் முழுமையாக முதலீடு செய்தேன்.

என்னுடைய தடைகள் என்னென்ன அதை எப்படி நீக்குவது, எனது குறைபாடுகள், தவறுகள் என்ன அதை எப்படி தவிர்ப்பது மற்றவர்களைப்போல் வெற்றியாளருக்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என பல்வேறு மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்திருக்கிறது. அதற்காக பிரார்த்தனை செய்ததுடன் மாற்றங்களுக்கு என்னை தயார்படுத்தியும் இருக்கிறேன். இவ்வாறு ஐஸ்வர்யா லட்சுமி கூறினார்.

Tags : Actress Open Dog ,
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...