×

கருங்கல் குவியலை கொட்டி டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பிலிருந்து காக்க வேண்டும்-முதல்வருக்கு கோரிக்கை

தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பில் இருந்து காப்பாற்ற கருங்கல் குவியலை கொட்டவேண்டும் என்று முதலமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.தரங்கம்பாடியில் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை இன்றளவும் பாதுகாக்கபட்டு இந்தியா – டேனிஷ் கலாச்சாரத்தை பறைசாற்றி வருகிறது. டேனீஷ் நேவிகேப்டன் ரோலண்டுகிராப் தரங்கம்பாடியையும் அதன் சுற்றுபுறத்தையும் தஞ்சை மன்னாpடம் விலைக்கு வாங்கி கி.பி.1620-ல் தரங்கம்பாடி கடற்கரையில் டேனீஷ் கோட்டையையும் அதை சுற்றி மதில் சுவா;களையும் எழுப்பி நுழைவாயிலையும் கட்டினார்.இது தற்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடல் ஓரம் உள்ள இந்த டேனிஷ் கோட்டை சுனாமி பேரலையால் கூட அசைத்துபார்க்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் கடல் சீற்றம் ஏற்படும் போதெல்லாம் கடல்தண்ணீர் டேனிஷ் கோட்டையை தாக்குகிறது. கருங்கல் குவியல் போடாததால் டேனிஷ் கோட்டை வரை கடல் கொந்தளிப்பாபால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பில் இருந்து காப்பாற்ற கருங்கல் குவியலை கொட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து தரங்கம்பாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுல்தான் முதலமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடல் அரிப்பில் இருந்து டேனிஷ் கோட்டையை பாதுகாக்க கருங்கல் குவியலை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் அப்போது தான் எதிர்காலத்தில் டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பில் இருந்து காப்பாற்ற முடியும். தரங்கம்பாடி கடற்கரையில் மனித சுகாதாரத்திற்கு தேவையான ஓசோன் காற்று அதிகமாக வீசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று கோரிக்கை மனுவில் கோரியுள்ளார்.தரங்கம்பாடி கடலில் குளிக்க போலீசார் தடைதரங்கம்பாடி கடல் அபாயகரமானது என்றும் இங்கு குளிப்பதோ, தண்ணீரில் விளையாடுவதோ, நீச்சல் அடிப்பதோ உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றும் இதுவரை பல பேர் இறந்துள்ளார்கள் என்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த எச்சரிக்கை போர்டுகளை கடலோர போலீசார் தரங்கம்பாடி கடற்கரையில் பல இடங்களில் வைத்துள்ளனர்….

The post கருங்கல் குவியலை கொட்டி டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பிலிருந்து காக்க வேண்டும்-முதல்வருக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Danish fort ,Tarangambadi ,Mayiladuthurai District ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது