×

எம்.ஆர்.ராதா வாழ்க்கை படமாகிறது

எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் மறைந்த எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படம் தயாராக விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலை காட்டி நடித்ததுடன் அரசியல் பணிகளிலும் ஆர்வம் காட்டினார் எம்.ஆர்.ராதா.

அவரது செயல்பாடுகள் தந்தை பெரியாரை கவர்ந்தது. இதையடுத்து அவருக்கு நடிகவேல் என்ற பட்டத்தை வழங்கினார். எம்.ஆர்.ராதா வாழ்க்கை படத்தை அவரது மகள் நடிகை ராதிகா தயாரிக்க உள்ளாராம். இயக்குனர் ஜீவ் இயக்குகிறார். இவர் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் இயக்குனர் மட்டுமல்ல எம்.ஆர்.ராதாவின் பேரனும் ஆவார்.

Tags : Radha ,
× RELATED சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா மீது போலீசில் புகார்..!!