×

ஒத்த செருப்பு ரீமேக்கில் நவாசுதீன்

பாலிவுட்டில் தனது நடிப்பாற்றலால் பெயர் போனவர் நவாசுத்தீன் சித்திக். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தியில் பிசியாக நடித்து வரும் அவர், பார்த்திபனின் ஒத்த செருப்பு பட ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் நவாசுத்தீனை அவரது வீட்டில் சந்தித்தார் பார்த்திபன்.

அப்போது ஒத்த செருப்பு படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாகவும் அதில் தான் நடித்த கேரக்டரில் நடிக்கும்படியும் நவாசுத்தீனை கேட்டுக்கொண்டார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதை டிவிட்டரில் வெளியிட்டு, ‘நவாசுத்தீனை வைத்து செய்ய இருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

Tags : Nawazuddin ,
× RELATED டோலிவுட்டுக்கு வருகிறார் நவாசுத்தீன் சித்திக்