×

தனுஷ் படத்துக்கு சிரஞ்சீவி பட டைட்டில்

அசுரன் படத்துக்கு பிறகு தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்திருக்கும் இப்படத்தை டிஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். வரும் 16ம் தேதி பட்டாஸ் படம் திரைக்கு வருகிறது.

அதே நாளில் தெலுங்கில் ரஸ்டம் என்ற பெயரில் பட்டாஸ் படம் ரிலீஸ் ஆகிறது. ரஸ்டம் டைட்டிலில் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படம் ஒன்று 1984 ஆம் ஆண்டு வெளியானது. அந்த டைட்டில் தற்போது தனுஷ் படத்துக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

Tags : Dhanush ,Chiranjeevi ,
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்