டிஜிட்டல் முறையில் மீண்டும் ஒல்லியாகும் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா உடல் எடை பிரச்னை அவரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இஞ்சி இடுப்பழகி படத்தின் கதாபாத்திரத்துக்காக அவர் 100 கிலோ வெயிட் போட்டார். அதன்பிறகு அந்த வெயிட்டை குறைப்பதற்காக மேற் கொண்ட முயற்சிகள் ஓரளவுக்கே பயன் அளித்தது. இதனால் பாகுபலி 2ம் பாகத்தில் அவர் நடிப்பதும் அப்போது தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. அவருக்காக இனியும் காத்திருக்க முடியாது என்ற பட்சத்தில் புஷ்டியான தோற்றத்திலேயே அனுஷ்கா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

பின்னர் டிஜிட்டலில் விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் மூலம் அனுஷ்காவின் ேதாற்றம் பட காட்சிகளில் ஸ்லிம் தோற்றத்துக்கு அழகாக மாற்றப்பட்டது. அடுத்த படம் நடிப்பதற்குள் ஒல்லியாவதற்காக அனுஷ்கா தேவையான பயிற்சி, உணவு கட்டுப் பாடு மேற்கொண்டார். எடை குறைந்துவிட்டதாக அவரது புகைப்படம் வெளியானதே தவிர அவரை நேரில் பார்த்தவர்கள் அவரது குண்டான தோற்றத்தில மாற்றம் எதுவும் தெரியவில்லை என கமென்ட் பகிர்ந்தனர்.

ஒரு வழியாக சைலன்ட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனுஷ்கா. அதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் மீண்டும் உடல் தோற்றத்தை ஸ்லிம்மாக மாற்றுவதற்கான பயிற்சிக்கு அவர் வெளிநாடு புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் சைலன்ட் படத்தில் அவர் நடித்த காட்சிகளை பாகுபலி 2ம் பாகத்தில் விஎப்எக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் ஒல்லியாக மாற்றியதுபோல் இப்படத்திலும் மாற்ற வேண்டும் என்று அனுஷ்கா கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

அதற்கு பட தரப்பு சம்மதம் தெரிவித்திருக்கிறதாம். சில கோடிகள் இதற்காக செலவிட வேண்டியிருந்தாலும் அதற்கான பணிகள் தொடங்கியிருக்கிறது.

அனுஷ்கா தனது பட புரமோஷனுக்காக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தால் அவரிடம் உடல் எடை பிரச்னை மற்றும் காதல் விவகாரம் குறித்து பத்திரிகையா ளர்கள் கேள்வி கேட்பதால் சமீபகாலமாக அவர் சந்திப்புக்களை தவிர்த்து வருகிறார்.

Related Stories:

>