×

இலை, சாணத்தை கஞ்சாவாக்கிய இயக்குனர்

மர்ஜுவானா பெயரில் புதிய படம் உருவாகிறது. அது என்ன மர்ஜுவானா என்றதற்கு பட இயக்குனர் எம்.டி.ஆனந்த், தாய் கலைகூடம் எஸ்.ராஜலிங்கம், மைதீன் ராஜா கூறியதாவது: போதை பொருள் கஞ்சாவை குறிக்கும் விஞ்ஞான பெயர் மர்ஜுவானா. இது சைக்கோ திரில்லர் படம். போதைக்கு அடிமையானால் என்ன விளைவு ஏற்படும் என்பது தான் மையகரு. தலைமுறை இடைவேளையில் இளைஞர்களின் மாற்றத்தை இப்படம் அலசுகிறது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து காட்சிகள் படமாகி உள்ளது.

இது ஆபாச படம் கிடையாது. ஆனால் தணிக்கையில் யூ சான்று தர 52 காட்சிகளை வெட்ட வேண்டும் என்றார்கள். யூ/ஏ சான்று கேட்டபோது அதற்கும் மறுத்து ஏ சான்று கொடுத்தார்கள். ‘அட்டு’ பட ஹீரோ ரிஷிரித்விக் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆஷா பாத்தலோம், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்டி.விஜய் தயாரிக்கிறார். இப்படத்தில் கஞ்சா போதை பொருளை நேரடியாக காட்டவில்லை அதற்கு பதிலாக இலைகளை சாணத்தில் கலந்து அதையே கஞ்சாபோல் காட்டியிருக்கிறோம்’ என்றனர்.

Tags :
× RELATED நேரடி அரசியல் பேசும் “அறம் செய்’’ படம்!!