உயிர் பிழைக்க ஓடிவரும் நைஜீரியா நடிகர்

நைஜீரியா நாட்டு திரைப்பட நடிகர் சாமுவேல் அபியோலா ராபின்சன். இவர் நைஜீரிய படத்தில் நடித்ததுடன் மலையாளத்தில் சுதானி `ஃப்ரம் நைஜீரியா, ஒரு கரீபியன் உதயிப்பு’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நைஜீரியாவில் இருக்கும் ராபின்சன் கொச்சி வருவதற்கு நிதி உதவி செய்ய கேட்டிருக்கிறார். இது குறித்து இணைய தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராபின்சன்,’2019 என் வாழ்க்கையின் மிக மோசமான ஆண்டாகும்.

சில வாரங்களுக்கு முன்பு நான் மிகவும் மனச் சோர் வடைந்தேன், நான் என் சொந்த வாழ்க்கையை கிட்டத்தட்ட சாகடித்து விட்டேன். எனக்கு வரப்பெற்ற திரைப்படங்கள் போலியானவையாக அமைந்தன. நைஜீரியாவில் எனக்கு துன்பம் மற்றும் கஷ்டத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

அந்த இடத்தில் நான் இறக்க விரும்பவில்லை, நான் உயர முயற்சிக்கிறேன் அதற்கு ஒரே வழி நைஜீரியாவிலிருந்து புறப்படுவதுதான். லாகோஸிலிருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு ஒரு விமான டிக்கெட் வாங்க வேண்டும். அதற்கு எனக்கு உதவி வேண்டும். நான் இந்தியாவுக்கு வந்த பிறகு என்னிடம் ஒரு திட்டம் உள்ளது, இந்தியாவில் நான் எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கி றேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

>