×

சன் குடும்பம் விருதுகள் விழா கொண்டாட்டம்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சிறப்பாக நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, சன் டிவி, ‘சன் குடும்பம் விருதுகள்’ பெயரில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கி வருகிறது. கலைஞர்களின் திறனையும், உழைப்பையும் கவுரவப்படுத்துகிற நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 2019ம் ஆண்டுக்கான சன் குடும்பம் விருது வழங்கும் விழா சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடந்தது. இதில் சன் டிவி கலைஞர்கள், நடிகர், நடிகைகள். சன் டிவி நேயர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் சிறந்த நடிகராக சஞ்சீவ் (கண்மணி), நடிகையாக பிரியங்கா நல்கரி (ரோஜா) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றனர். சிறந்த குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் சிறந்த அம்மாவாக மீரா கிருஷ்ணன் (நாயகி), அப்பாவாக தலைவாசல் விஜய் (அழகு), சிறந்த சகோதரராக திருமுருகன் (கல்யாணவீடு), சிறந்த தங்கையாக அங்கிதா (கல்யாண வீடு), பென்சி (கல்யாண வீடு),  டோனா சங்கர் (கல்யாண வீடு)ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறந்த வில்லனாக சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி (நாயகி), சிறந்த வில்லிகளாக பிரேமி (கண்மணி), ஷர்மிதா கவுடா (நிலா) ஆகியோரும்,  இளம் வில்லியாக ஷாமிலி (ரோஜா), பிரபல வில்லியாக சங்கீதா (அழகு) ஆகியோரும் தேர்வானார்கள். சிறந்த மருமகள் விருது ஸ்ருதிக்கும்(அழகு), சிறந்த மருமகன் விருது பாண்டிகமலுக்கும் (கல்யாண பரிசு),  சிறந்த மாமனார் விருது செந்தில்நாதனுக்கும் (நாயகி), சிறந்த மாமியார் விருது காயத்ரிக்கும் (ரோஜா) வழங்கப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது ஜிஷ்ணு (கண்மணி),சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது பாப்ரி கோஷ் (நாயகி), ஆகியோருக்கு கிடைத்தது.

சிறந்த காமெடி நடிகைக்கான விருது ரம்யா (ரோஜா)வுக்கு கிடைத்தது. சிறந்த தாத்தா விருதை டெல்லி குமார் (பாண்டவர் இல்லம்), சிறந்த பாட்டி விருதை கோவை கமலா (தமிழ்செல்வி) ஆகியோர் பெற்றனர். சிறந்த குடும்பத் தலைவி விருது பூர்ணிமா பாக்யராஜுக்கு (கண்மணி) வழங்கப்பட்டது. சிறந்த ஜோடியாக சஞ்சீவ், லீசா (கண்மணி) தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது சேகர்ராம் (லட்சுமி ஸ்டோர்ஸ்), சிறந்த வசனகர்த்தா விருது முத்துலட்சுமி ஆறுமுக தமிழன்(கல்யாண வீடு), சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது திருமுருகன் (கல்யாண வீடு), சிறந்த இசை அமைப்பாளர் விருது ஹரி (அழகு), சிறந்த பாடலாசிரியருக்கான விருது பா.விஜய் (பாண்டவர் இல்லம்), சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது ராஜு (கண்மணி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனர்களாக எஸ்.குமரன் (நாயகி), செல்வம் (அழகு)  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த தொடருக்கான விருதை ‘நாயகி’ பெற்றது. பிரபலமான ஹீரோவாக கிருஷ்ணாவும் (ரன்), ஷிபு சூரியனும் (ரோஜா), பிரபலமான ஹீரோயினாக நட்சத்திராவும் (லட்சுமி ஸ்டோர்ஸ்), தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரபல ஜோடியாக ஷிபு, பிரியங்காவும் (ரோஜா), ரொமான்டிக் ஜோடியாக ஹுசேன், நட்சத்திராவும் (லட்சுமி ஸ்டோர்ஸ்), ரியல் ஜோடியாக கிருஷ்ணா, சாயாசிங்கும் (ரன்) தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றனர். பிரபல சீரியலுக்கான விருது ரோஜாவுக்கு வழங்கப்பட்டது.

சன் தொலைக்காட்சி பெருமைமிகு நட்சத்திர விருது ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்டது. சன் தொலைக்காட்சி தங்க மங்கை விருது குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. மற்றொரு தங்க மங்கையாக ரேவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். சன் நட்சத்திர சிறப்பு விருது வடிவுக்கரசிக்கும், தேவயானிக்கும் வழங்கப்பட்டது.  பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பட்டிமன்ற முடிசூடா மன்னர் என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சன் பட்டிமன்ற நட்சத்திரம் சிறப்பு விருது ராஜாவுக்கும், பாரதி பாஸ்கருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் பாண்டிலட்சுமியுடன் இணைந்து நடனமாடினார்.

தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வடிவேலுவின் காமெடி கலாட்டாவும், அவர் ராகவா லாரன்சுடன் இணைந்து ஆடிய நடனமும் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்திருந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, இயக்குனர்கள் பாண்டிராஜ், சுரேஷ் கிருஷ்ணா, பொன்ராம், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு, பார்த்திபன், நட்டி, ஆரவ், ஆர்.கே.சுரேஷ், மனோபாலா, சதீஷ், விடிவி.கணேஷ், அனுமோகன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி, வாணி போஜன், அதிதி பாலன், அதுல்யா ரவி, அம்ருதா அய்யர், இசை அமைப்பாளர் இமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்ட விழாவின் முதல் பகுதி, சன் டிவியில் வரும் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கும், இரண்டாம் பகுதி ஜனவரி 12ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

Tags : Sun Family Awards Ceremony ,
× RELATED சன் குடும்பம் விருதுகள் விழா: கோலாகலமாக நடந்தது