×

தனுஷ் நாயகியின் பேட்டரி

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அம்மு அபிராமி. அடுத்து மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி  பாதிப்புக்குள்ளாகிறது என்பதை மையமாக வைத்து உருவாகும் பேட்டரி படத்தில் நடிக்கிறார். மணிரத்னம், சரண், வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிபாரதி இப்படத்தை இயக்குகிறார்.

அவர் கூறும்போது,’ வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக உள்ளது. மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்பை கிரைம், த்ரில்லாக இப்படம் சொல்கிறது.

சப் இன்ஸ்பெக்டராக நாயகன் செங்குட்டுவன் நடிக்க அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். ஜார்ஜ் மரியான், ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோருடன் மேலும் 2 முக்கிய பாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வாகிறார்கள். சித்தார் விபின் இசை அமைக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்’ என்றார்.

Tags : Dhanush ,heroine ,
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி