எனக்கு பட வாய்ப்புகள் இல்லையா? கோபத்தில் தமன்னா

தேவி 2ம் பாகத்துக்கு பிறகு தமிழில் பெட்ரோமாக்ஸ், ஆக்‌ஷன் என 2 படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.அந்த படங்களும் முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டன. தமிழில் புதிய படம் எதுவும் இல்லாத நிலையில்  தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறார். மகேஷ்பாபு தெலுங்கில் நடித்திருக்கும் ‘சரிலேரு நீகெவ்வுரு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் தமன்னா.

இப்படத்தில் இளம் நடிகை ராஷ்மிகா ஹீரோயினாக நடித்து வருகிறார். பட வாய்ப்பு எதுவும் இல்லாததால்தான் தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று பேச்சு எழுந்தது. இது தமன்னாவுக்கு தெரியவர அவர் அதுகுறித்து கூறும்போது,’நான் வேலைவெட்டியில்லாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பது

போல் தவறாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. வருடத்தில் 365 நாட்களும் நான் வேலை செய்கிறேன். பல்வேறு மொழி படங்களில் நடிப்பதால் வெவ்வேறு இடங்களில் பணியாற்ற செல்ல வேண்டி உள்ளது. அதனால் சில மொழிப் படங்களில் இடைவெளி ஏற்படுகிறது. புத்தாண்டில் எனக்கு கைநிறைய படங்கள் இருக்கிறது’ என்றார்.

Related Stories:

>