×

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம். அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள். சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: அரசு பொறுப்பேற்றவுடன், பத்திரிகையாளர்களின் நலன் காக்க பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து, பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்ததோடு மட்டுமல்லாது பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி, பத்திரிகையாளர் நல நிதியம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை, இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவது மட்டுமின்றி, சிறந்த  இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருதும் வழங்கி கவுரவித்து வருகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்கள் குறித்த செய்திகளை எந்தவித குறைகளுமின்றி மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை செம்மையாக செய்து வரும், பத்திரிகையாளர்களுக்கும் மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் எனது தேசிய பத்திரிகை தின வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்.பாமக நிறுவனர் ராமதாஸ்: கத்தி முனையை விட வலிமையான பேனா முனைகள் இல்லாமல் இந்திய ஜனநாயகம் இல்லை நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய 3 தூண்களுடன் இணைந்து ஜனநாயகத்தைக் காக்கும் 4வது தூண்களுக்கு தேசிய பத்திரிகையாளர் நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பாமக தலைவர் அன்புமணி: இந்திய பிரஸ் கவுன்சில் 56 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நாள் இன்று. தேசிய பத்திரிகையாளர் நாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் நடுவில் பணியாற்றும் 4வது தூணான ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: தேசிய பத்திரிகையாளர் நாளான இன்று (16ம் தேதி)செய்தித்தாள், தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஊடகங் களில் பணிபுரியும் அனைவருக்கும்வாழ்த்துகள்….

The post தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : National Journalists' Day ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...