×

நடிகை ஸ்ருதியை தேடி வந்த செல்லம்

ஒரு வருட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் நடிப்பு பக்கம் தலைகாட்டியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம், இந்தியில் மகேஷ் மஞ்சுரேக்கர் இயக்கும் பவர் என 2 படங்களில் நடிக்கிறார். இதற்கிடையில் ஹாலிவுட் படமான ப்ரோஸன் 2 படத்திற்காக தமிழில் பின்னணி குரல் கொடுத்தார். நடிப்பு ஒரு பக்கம், அவரது கனவான பாப் பாடகி ஆசை ஒரு பக்கம் என இரண்டு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி.

கடந்த மாதம் லண்டன் சென்றவர் மேடையில் தோன்றி பாப் இசை பாடல்கள் பாடி அசத்தினார். அந்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மார்டன் உடையில் கவர்ச்சியாக கவர்ந்திழுத்த ஸ்ருதி மற்றொரு புகைப்படத்தையும் சேர்த்துள்ளார். சாலையோர நாய்க்குட்டி ஒன்றை கொஞ்சி மகிழும் அழகான அந்த புகைப்படம் ஏராளமான லைக்குகளை அள்ளி உள்ளது.

படப்பிடிப்பில் ஸ்ருதி நடித்துக் கொண்டிருந்தபோது தெருபக்கம் ஓடிக்கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று திடீரென்று ஷூட்டிங் நடக்கும் செட்டுக்குள் புகுந்துவிட்டது. அழகான அந்த நாய்க் குட்டியை யாரும் விரட்டவில்லை. இங்கும் அங்கும் ஓடியபடி இருந்த நாய்க்குட்டி ஸ்ருதியை நோக்கி மெதுவாக நடந்து வர அதை அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தார். படப்பிடிப்பில் இருந்தபோது என்னை காண வந்த பார்வை யாளர் இவர் என அதற்கு ஒரு விலாசமும் தந்திருக்கிறார் ஸ்ருதி.

Tags : Shruti ,search ,
× RELATED இனிமேல் இசை ஆல்பத்தில் நடிகரானது ஏன்? லோகேஷ் கனகராஜ் பதில்