×

மாதவரம் ரெட்டேரி நிரம்பியது

புழல்: வடகிழக்கு பருவ மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், மாதவரம் ரெட்டேரியும் நிரம்பி திறந்தவெளி மதகு வழியாக வெளியேறும் தண்ணீர் கதிர்வேடு, அறிஞர் அண்ணா நகர், புழல் பாலாஜி நகர், வெஜிடேரியன் நகர், வடபெரும்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலை வழியாக வந்து புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் கலக்கிறது. கதிர்வேடு, அறிஞர் அண்ணா நகர் கால்வாயில் செல்லும் மழைநீரை மாதவரம் மண்டல தலைவர் நந்தகோபால், மண்டல ஆணையர் முருகன், கவுன்சிலர் சங்கீதா பாபு ஆகியோர் பார்வையிட்டனர். …

The post மாதவரம் ரெட்டேரி நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Monthawaram Retary ,Chennai ,Bundi ,Chamberambakkam ,Cholavaram ,
× RELATED திருவள்ளூர் செங்குன்றம் சாலை, ஈக்காடு...