×

புத்தாண்டில் பெயர் மாற்றிய ஹீரோ

புத்தாண்டில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்ல முடியாதளவுக்கு அதன் வருகையையொட்டி தனது பெயரை மாற்றிக்கொண்டு புதிய மாற்றத்துக்கு ரெடியாகி இருக்கிறார் நடிகர் ஆரி. நெடுஞ்சாலை படத்தில் கலக்கியவர் அடுத்தடுத்து தரணி, மாயா, உன்னோடு கா, முப்பரிமாணம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் நெடுஞ்சாலைதான் அவரை இன்னமும் அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது.

வரும் 2020ம் ஆண்டு முதல் தனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியிருக்கிறார். இனிமேல் என்னை அழைக்கும்போது ஆரி அருஜுனா என்றே சொல்லுமாறு ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விட்டிருக்கிறார். அவரது பெயர் ராசி யோகத்தை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags : hero ,New Year ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்