×

மனைவியை முதுகில் சுமந்த ஆர்யா

நான் கடவுள், அவன் இவன், வேட்டை என பரபரப்பாக இருந்த ஆர்யா திடீரென்று சைலன்ட் மோடுக்குபோய்விட்டார். தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். அதுவும் நடிகை சாயிஷா காதலித்து திருமணம் செய்துகொண்டபிறகு சாயிஷா,ஆர்யா ராசி ஒர்க் அவுட் ஆகி வருகிறது. டெடி, சந்தனத்தேவன் உள்ளிட்ட 3 படங்களில் ஆர்யா நடிக்கிறார். சாயிஷா மனைவியாக வந்தாலும் வந்தார் நிஜ வாழ்க்கையையே சினிமா வாழ்க்கைபோல் மாற்றி அமைத்து கொண்டிருக்கிறார் ஆர்யா.

அவருடன் வெளிநாடு செல்வது டேட்டிங் செய்வது. சிறுபிள்ளைகள் விளையாடும் உப்பு மூட்டை விளையாட்டு போல் சாயிஷாவை முதுகில் சுமந்து கொண்டு நடப்பது என காதல் களியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மாலத்தீவில் சாயிஷாவுடன் அவர் செய்யும் காதல் விளையாட்டுகளை புகைப்படமாக ஆர்யாவே வெளியிட்டு வருகிறார்.

Tags : Arya ,
× RELATED விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட அசோக்...