×

ஜூட் விட்ட மாளவிகா மோகனன்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 64 என உத்தேச டைட்டிலுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் நடித்தவர். டெல்லியில் நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் கலந்துகொண்டு நடித்த மாளவிகா பின்னர் கர்நாடகாவில் சிமோகா சிறையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்த படப்பிடிப்பில் விஜய்சேதுபதியும் கலந்துகொண்டார். விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன். அர்ஜுன்தாஸ் நடித்த ஆக்‌ஷன் காட்சிகள் சிமோகா சிறையில் படமாக்கப்பட்டு வந்தது.

இதில் விஜய், விஜய்சேதுபதி, அர்ஜுன்தாஸ் மோதிய காட்சிகள் படமானது. மாளவிகா மோகனன் நடித்த முக்கிய காட்சிகளும் படமாகின. முன்னதாக கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விஜய் அங்கிருந்து புறப்பட்டார். அவர் கிறிஸ்துமஸ் விழாவை மனைவியுடன் கொண்டாட லண்டன் சென்றார். அதேபோல் மாளவிகா மோகனனும் தனது படப்பிடிப்பு முடிந்ததையடுத்து புத்தாண்டு விடுமுறையை கொண்டாட வெளிநாட்டுக்கு ஜூட் விட்டார்.

தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் சில முக்கிய காட்சிகள் அங்கு படமாகிறது. அதன் படப்பிடிப்பு முடிந்து புத்தாண்டு கொண்டாட படக் குழுவினருடன் விஜய்சேதுபதியும் சென்னை திரும்புகிறார். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் சக நட்சத்திரங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். முன்னதாக நாளை 31ம் தேதி மாலை ‘விஜய் 64’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது.

Tags : Jude ,Malavika Mohanan ,
× RELATED ஓட்டு கேட்க போன இடத்தில் ‘கும்மாங்குத்து’ பாஜ வேட்பாளர் ‘ஜூட்’