×

நயன்தாரா, ‘நெற்றிக்கண்’ திறப்பு எப்போது?

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ்சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அவர் தர்பார் படப்பிடிப்பில் இருந்ததால் நெற்றிக்கண் படப்பிடிப்பு காத்திருந்தது. தர்பார் படத்தை முடித்துக்கொடுத்த நிலையில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா முழுமையாக கவனம் செலுத்துவார் என்று எண்ணிய நிலையில் அவரோ ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க சென்று விட்டார்.

நெற்றிக்கண் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது என்று கேட்டால் மவுனம்தான் பதிலாக வருகிறது. பொருளாதார பிரச்னையால் அப்பட தயாரிப்பை விக்னேஷ் சிவன் பெண்டிங்கில் வைத்திருப்பதாக கூறினாலும் விக்னேஷ் சிவனுக்காக அப்படத்தை நயன்தாராவே தயாரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Nayanthara ,
× RELATED நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு விருது