×

சித்தார்த் ஜோடியாகும் திவ்யான்ஷா

மஜிலி தெலுங்கு படத்தில் நடித்தவர் திவ்யான்ஷா கவுஷிக். இவர் தமிழில் டக்கர் படம் மூலம் அறிமுகமாகிறார். சித்தார்த் நடிக்கும் இந்த படத்தை புதியவர் கார்த்தி கிரிஷ் இயக்குகிறார். யோகிபாபு, முனிஷ்காந்த், ஆர்ஜே. விக்னேஷ், அபிமன்யு சிங் நடிக்கிறார்கள். இதில் சித்தார்த் ஜோடியாக திவ்யான்ஷா அறிமுகமாக உள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள் நிரம்பிய காதல் படமாக 'டக்கர்' உருவாகியுள்ளது.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளது. இந்த  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஷால் வெளியிட்டார்.

Tags : Siddharth ,
× RELATED மஹாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் விடுமுறை