×

விளையாட்டு கதையில் விஷ்ணு

எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்திலும், தவிர காடன், எப்.ஐ.ஆர் ஆகிய  படங்களிலும் நடித்து முடித்துள்ளார் விஷ்ணு விஷால். இதையடுத்து அவர் நடிக்கும் புதுப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தை இயக்கிய செல்லா அய்யாவு, அடுத்து நான் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை என்றாலும், குடும்ப சென்டிமென்ட் மற்றும் காதல், ஆக்‌ஷன், காமெடி என ஜனரஞ்சகமான படமாக உருவாக்கப்படுகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்றார்.

Tags : Vishnu ,
× RELATED இணையதள விளையாட்டோடு ஆன்லைன் வகுப்பு...