×

தனுஷ்கோடியில் ஆமிர்கான்

லால்சிங் சட்டா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் ஆமிர்கான். இந்த படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆமிர்கான் பங்கேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ்கோடியில் போதைபொருள் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும்படி காவல்துறை சார்பில் ஆமிர்கானுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில் பங்கேற்று அவர் பேசும்போது, ‘போதைப் பொருள் பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகிவிடக்கூடாது. உடல்நலத்தை பேணுவதில் அக்கறையாக இருக்க வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான். அதை சந்தோஷமாக அனுபவிக்க போதையிலிருந்து விலகி இருக்க வேண்டும்’ என்றார்.

Tags : Aamir Khan ,Dhanushkodi ,
× RELATED மகாபாரதம் கதையை படமாக்கும் ஆமிர்கான்