×

கடற்படையில் 150 அப்ரன்டிஸ்கள்

கர்நாடக மாநிலம், கார்வாரில் உள்ள இந்திய கடற்படை கப்பல்கள் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் ஒரு வருட பயிற்சிக்கு 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பயிற்சி: Trade Apprentice- மொத்த இடங்கள்- 150டிரேடு வாரியாக இடங்கள் விவரம்:Carpenter-14, Electrician- 15, Electronics Mechanic- 19, Fitter-18, Information and Communication Technology System Maintenance-4, Instrument Mechanic- 9, Machinist-4, Mechanic Diesel-14, Mechanic Machine Tool Maintenance-9, Mechanic Motor Vehicle-4, Mechanic Ref and AC-5, Painter (General)-4, Plumber-9, Sheet Metal Worker- 11, Tailor (General)-2, Welder (Gas & Electric)- 9வயது: 01.04.23 தேதியின்படி 14 முதல் 21க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகளில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.உயரம்: குறைந்த பட்சம் 150 செ.மீ., இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 45 கிலோ எடை இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை இருக்க வேண்டும். Naval Ship Repair Yard அதிகாரிகளால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.davp.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2022.

The post கடற்படையில் 150 அப்ரன்டிஸ்கள் appeared first on Dinakaran.

Tags : Indian Naval Ship Repair Factory ,Karwar, Karnataka ,
× RELATED சொல்லிட்டாங்க…