பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது காதலா? திரிஷா பதில்

விஜய்சேதுபதியுடன் திரிஷா நடித்த படம் 96. இதில் பள்ளி தோழனை காதலிப்பது போல் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானது. படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும்   அவருக்கு இப்படத்துக்காக விருதுகள் தேடி வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் பிரபல திரைப்பட விருதினை வென்றார்.

இதுபற்றி திரிஷா கூறியது: 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரம் ஏற்றிருந்தேன். அதற்கான வரவேற்பு எனக்கு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.

அது நல்ல கதாபாத்திரம் என்பது எனக்கு தெரியும். அதுபோன்ற பாத்திரங்களை படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் ஏற்ற கதாபாத்திரம் இவ்வளவு பிரபலம் ஆகும் என்று எனக்கு தெரியாது. படம் வெற்றி பெறும் அதில் இடம்பெற்ற ராம் (விஜய்சேதுபதி), ஜானு கதாபாத்திரத்தை ரசிகர்கள் தங்களுடன் பொருத்திப்பார்கள் என்று எண்ணினேன்.

ஆனால் சிம்ப்ளாக ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்து நடித்தது இவ்வளவு வைரலாகியிருக்கிறது. அந்த தோற்றத்தை பார்த்து நானே உறைந்துவிட்டேன். அவ்வளவு எளிமையான தோற்றம். ஆனால் எளிமைதான் என்றைக்கும் ஒர்க்அவுட் ஆகும். ஒருசில கதாபாத்திரங்கள் மேஜிக்போன்றது.

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடித்த ஜெசி கதாபாத்திரத்துக்கு பிறகு ஜானு கதாபாத்திரம் அப்படியொரு அற்புதம் செய்திருக்கிறது. காதல் கதைகள் தான் எளிதாக மக்களை அடைகிறது என்று எண்ணுகிறேன். எனக்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ காதல் கதை எதுவும் கிடையாது. ஆனால் 96 கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது. இவ்வாறு திரிஷா கூறினார்.

Related Stories:

>