பாகுபலியாயக மாறிய யஷ்

கோலார் தங்க வயலில் அந்த காலகட்டத்தில் நடந்த சித்ரவதைகளை மையமாக வைத்து கேஜிஎப் என்ற படம் கடந்த ஆண்டு உருவானது. கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இப்படம் வெளியானது. இந்த ஒரு படம் மூலம் அப்பட ஹீரோ யஷ் திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தார்.

இப்படத்தின் 2ம் பாகம் ‘கேஜிஎப் சேப்டர் 2’ பெயரில் உருவாகி வருகிறது. கேஜிஎப் படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி அதை கொண்டாடும் விதமாக கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதில் பிரமாண்ட கல்தூண் ஒன்றை தொழிலாளர்களுடன் சேர்ந்து யஷ் இழுத்து வருவது போல் காட்சி இடம் பெற்றுள்ளது. பாகுபலியில் ராணாவின் உயரமான சிலை மக்கள் மீது விழும்போது அதை தொழிலாளர்களுடன் சேர்ந்து பிரபாஸ் இழுத்து நிறுத்துவார். அந்த காட்சியை யஷ் நடித்துள்ள கல்தூண் காட்சி நினைவுபடுத்துகிறது.

Related Stories:

>