×

ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்: மற்றவர் நம்பிக்கையை மாற்றக்கூடாது

அம்பிகாபூர்: ‘இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள். உலகிலேயே இந்துத்துவா மட்டுமே வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும் என்று நம்புகிறது’ என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். சட்டீஸ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைமையகமான அம்பிகாபூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள் என்று 1925ம் ஆண்டில் இருந்து (ஆர்எஸ்எஸ் தொடக்கப்பட்ட ஆண்டு) நாங்கள் சொல்லி வருகிறோம். மதம், கலாசாரம், மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி, வேற்றுமையில் ஒற்றுமை பண்பாட்டுடன் வாழ விரும்புபவர்கள் அனைவரும் இந்துக்கள் தான்.ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கை, சடங்குகளை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கையை மாற்ற முயலக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்….

The post ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்: மற்றவர் நம்பிக்கையை மாற்றக்கூடாது appeared first on Dinakaran.

Tags : RSS ,India ,Ambikapur ,Hindua ,
× RELATED இந்திய அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ராகுல் காந்தி