×

கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் அல்ல: ஆர்.என்.ரவி பேச்சு

திருவனந்தபுரம்: கவர்னர் பதவி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல என்று கேரள சட்டமன்றத்தில் நேற்று நடந்த லோகாயுக்தா தின விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேசினார். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டமன்ற வளாகத்தில் நேற்று லோக் ஆயுக்தா தின விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கேரள சட்டம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ராஜீவ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேசியது: லோக் ஆயுக்தா அனைத்து மாநிலங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். இது பலவீனமடையாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கவர்னர்கள் உள்பட அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டும். கவர்னர் பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்து போடாமல் இருப்பதற்கு தகுந்த காரணங்கள் இருக்கும். உச்ச நீதிமன்றமும் அதை தெளிவுபடுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்….

The post கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் அல்ல: ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Lokayukta Day ,Kerala Assembly ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?