×

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இரு ஹீரோயின்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இரு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஒருவர், சஞ்சனா நடராஜன். இவர், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் நடித்தவர். இன்னொருவர், ஐஸ்வர்யா லட்சுமி. இவர், விஷால் நடிப்பில் ரிலீசான ஆக்‌ஷன் படத்தில் நடித்தவர்.

தவிர, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் லிஜோ ஜார்ஜ், கலையரசன், அஸ்வந்த் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த வாரத்துடன் முழு படப்பிடிப்பும் முடிவடைகிறது.

Tags : Dhanush ,Karthik Subburaj ,
× RELATED வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக...