முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் 24 வருடங்களுக்கு பிறகும் தனது அழகை கட்டிக்காத்து வருகிறார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு தாய் ஆனபோது உடலில் வெயிட்போட்டார். பின்னர் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மூலம் எடையை குறைத்தார். படங்களிலும் அவ்வப்போது நடிக்கிறார். மகளை கவனிக்கும் நேரம் போகத்தான் சினிமாவுக்கெல்லாம் கால்ஷீட் என்ற முடிவுடன் இருப்பதால் அவர் படங்களில் நடிப்பதை பெரும் அளவுக்கு குறைத்துக் கொண்டிருக்கிறார்.