×

8 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு தெலங்கானாவில் எம்பிபிஎஸ் இடம் 4 மடங்கு அதிகரிப்பு: முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல்

திருமலை: தெலங்கானாவில் எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக 8 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து முதல்வர் சந்திரசேகரராவ் கூறினார். தெலங்கானா மாநிலத்தில் 8 புதிய மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் வகுப்புகளை பிரகதி பவனில் இருந்தபடி மெய்நிகர் சேவையில் முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: தெலங்கானா வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். தெலங்கானா நாட்டிற்கு வழிகாட்டியாக மாறி வருகிறது. புதிதாக 8 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது பெருமைக்குரியது. கொத்தகூடம், நாகர்கர்னூல், மெகபூபாபாத், சங்காரெட்டி, ராமகூடம், வனப்பர்த்தி, ஜெகட்டியாள், மன்சீரியால் ஆகிய 8 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட புதிய மருத்துவ கல்லூரியின் மூலம் 4 மடங்கு மாணவர் சேர்க்கை சீட் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 850 இடங்கள் இருந்தது. தற்போது 2,790 இடங்களாக அதிகரித்துள்ளது.  எம்பிபிஎஸ் இடங்கள் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. 33 மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகள் கட்டப்படும். இவ்வாறு, அவர் பேசினார். பட்டாசு வெடித்து 2 பேர் படுகாயம் சங்காரெட்டி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டதை கொண்டாட ஆளும் டிஆர்எஸ் கட்சியினர் பைக் பேரணியில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர். …

The post 8 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு தெலங்கானாவில் எம்பிபிஎஸ் இடம் 4 மடங்கு அதிகரிப்பு: முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல் appeared first on Dinakaran.

Tags : MPBS ,Telangana ,Chandrasekara Rao ,Tirumalai ,CM ,Dinakaran ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து