×

சிங்கப்பூர் மியூசியத்தில் சிலையாகிறார் காஜல்

சிலையெடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு என்ற ஒரு பழைய பாடல் வரும். மாமல்லபுரம் சிற்பங்கள்பற்றிய பாடலாக அது அமைக்கப்பட்டிருக்கும். கற்களால் செதுக்கப்பட்ட காலம் மாறி இப்போது மெழுகினால் செதுக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக சாதனையாளர் கள்  மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா. இங்கிலாந்து ராணி எலிசெபத், மற்றும் நடிகர்கள் அமிதாப்பச்சன். ஷாருக்கான்.

ஜாக்கிசான், நடிகை ஐஸ்வர்யாராய் போன்றவர்களுக்கு மெழுகு சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னிந்தியாவை சேர்ந்த நடிகை காஜல் அகர்வாலுக்கும் அங்கு சிலை வைக்கப்படுகிறது. ‘சிறுவயதில் எனது பெற்றோருடன் சிங்கப்பூர் மேடம் துஸாட்ஸ் மியூசியத்திற்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள தலைவர்களின் மெழுகு சிலைகளை பார்த்து அதிசயித்திருக்கிறேன்.

எல்லோரும் ஒரே இடத்தில் நேரில் வந்துவிட்டார்களோ என்று எண்ணு வேன். அந்தளவுக்கு தத்ரூபமாக சிலைகள் இருக்கும். அந்த இடத்தில் எனக்கும் ஒரு மெழுகு சிலை வரும் என்று எண்ணியதில்லை. மேடம் துஸாட்ஸில் எனது மெழுகு சிலையும் இடம்பெறுவதில் மகிழ்ச்சி. வரும் பிப்ரவரி 5ம் தேதி நேரில் சிலை அறிமுகப்படுத்துகின்றனர்’ என்றார் காஜல் அகர்வால். சிலை அறிமுக நிகழ்ச்சியில் காஜல் அகர்வாலும் பங்கேற்க உள்ளார்.

Tags : Kajal ,Singapore Museum ,
× RELATED இடுப்பில் கை வைத்த ரசிகர் அலறினார் காஜல் அகர்வால்