×

கதாநாயகி இல்லாமல் அஜீத் பட ஷூட்டிங்; இந்தி நடிகைகளுக்கு வலைவீச்சு

நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் மீண்டும் அஜீத் நடிக்கும் வலிமை படத்தை இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். கடந்த மாதமே பட பூஜை நடந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. அஜீத் நடிக்கும் சண்டைகாட்சிகள் அங்கு படமாகி வருகிறது. இப்படத்துக்கு பூஜை போட்ட நாள் முதலே அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி இணைய தளத்தை சுற்றி வந்தது.

விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்க அப்படம் பெரிய வெற்றி பெற்றது. மீண்டும் நயன்தாராவே ஜோடியாக நடித்தால் வலிமை படத்தை அதிக விலைக்கு விற்க பிளஸ் ஆக இருக்கும் என்று கணக்குபோடப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் போனிகபூர், லண்டனில் காதலன் விக்னேஷ்சிவனுடன் சுற்றுபயணம் செய்துகொண்டிருந்த நயன்தாராவை நேரில் சந்தித்து வலிமை படத்தில் நடிக்க கேட்டார்.

ஆனால் அவர் நடிப்பது உறுதியாகவில்லை. நடிகை நஸ்ரியா நாயகியாக நடிக்கிறார் என்றும் பேசப்பட்டது. அதை அவரே மறுத்துவிட்டார். தற்போது இந்தி நடிகைகள் பெயர்கள் அடிபடத் தொடங்கி உள்ளது. தமிழில் சில படங்களில் நடித்துவிட்டு இந்திக்கு சென்ற இலியானா, யாமி கவுதம் பெயர்கள் தற்போது ஹீரோயின்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளது.

இதில் கூடுதலாக பிரியங்கா சோப்ராவின் தங்கை பிரணிதி சோப்ரா பெயரும் இணைந்திருக்கிறது. இவர்களில் யாராவது ஒருவர் ஹீரோயினாக தேர்வாவார்கள் என்று தெரிகிறது. அஜீத் படத்திற்கு இந்தி ஹீரோயின்களுக்கு வலைவீசுவது ஏன் என்று விசாரித்தபோது இந்தியிலும் வலிமை படத்தை பெயர் மாற்றி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால்தான் இந்தி நடிகைகளுக்கு வலை வீசப்பட்டிருக்கிறதாம்.

Tags : Ajith ,actresses ,Webb ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்