×

போக்குவரத்து விதிகளை மீறி ஒரு வழி பாதையில் சென்ற கூடுதல் பெண் டிஜிபி வாகனத்திற்கு ரூ.1000 அபராதம்: மாநகர போக்குவரத்து போலீசார் அதிரடி

சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி போக்குவரத்து விதிகளை மீறி ஒரு வழிப்பாதையில் சென்ற கூடுதல் டிஜிபி பெண் அதிகாரியின் கார் ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் 24ம் தேதி முதல் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஒருவழிபாதையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தில் சென்றால் புதிய மோட்டார் வாகன சட்டப்படி ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.அதன்படி நேற்று இரவு கூடுதல் டிஜிபி பெண் அதிகாரியின் கார் ஒன்று போக்குவரத்து ெநரிசல் நேரத்தில் ஒரு வழிப்பாதையில் சென்றுள்ளது. இதை கவனித்த போக்குவரத்து போலீசார் கூடுதல் பெண் டிஜிபியின் கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ஆயிரம் ரூபாய் வசூலித்தனர். அதை சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது….

The post போக்குவரத்து விதிகளை மீறி ஒரு வழி பாதையில் சென்ற கூடுதல் பெண் டிஜிபி வாகனத்திற்கு ரூ.1000 அபராதம்: மாநகர போக்குவரத்து போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : MINTICAL ,Chennai ,National ,Police Action ,
× RELATED திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை...