×

தொடர்ந்து படம் தயாரிப்பேன் - கார்த்திக் சுப்புராஜ்

நிமிஷா சஜயன், ஜோஜூ ஜார்ஜ், அகில் விஸ்வநாத் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள படம், அல்லி. ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு, அஜித் ஆச்சார்யா. இசை, சி.ஜே.பாசில். திரைக்கதை: கே.வி.மணிகண்டன், சணல் குமார் சசிதரன். இயக்கம், சணல் குமார் சசிதரன். இப்படத்தை வெளியிடும் இயக்குனரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், ‘மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் நிமிஷா, நகரத்தின் வாடை என்னவென்று அறியாதவர்.

அவரும், அகிலும் நகரத்தை பார்க்கும் ஆசையில் பயணிக்கின்றனர். அப்போது ஜோஜூவை எதிர்பாராமல் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பிறகு அவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து அல்லி உருவாகியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற தரமான கதைகள் கொண்ட படங்களை எனது நிறுவனம் தயாரித்து வெளியிடும்’ என்றார்.

Tags : Karthik Subburaj ,
× RELATED கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்...