×

பொது கழிவறையை சீரமைக்க வலியுறுத்தல்

நிலக்கோட்டை: கோடங்கிநாயக்கன்பட்டியில் உள்ள பொதுக்கழிப்பறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை  ஊராட்சி ஒன்றியம், கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பழைய பொதுக்கழிவறை கட்டிடம் உள்ளது. இந்த கழிவறை கட்டிடம் பாழடைந்ததால் பூட்டியே கிடக்கிறது. இதன் அருகே அரசு துவக்க பள்ளி உள்ளது. இப்பகுதியில் சில தினங்களாக ெபய்து வரும் தொடர்மழையால் பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் கிடக்கும் இந்த கழிவறையிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள்  குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கழிவறை அருகே குப்பைகளை கொட்டுவதால் குப்பை  மேடாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே ஊராட்சி  நிர்வாகம் உடனடியாக இந்த பொதுக்கழிவறையை சீரமைப்பதுடன், அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்….

The post பொது கழிவறையை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nalakotta ,Kodanginayakkanpatti ,Dindigul District ,Nalakkotta Pruaddy Union ,Dinakaran ,
× RELATED கொடைரோடு பகுதியில் பகலில் வாட்டியது...