×

இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது; கார்த்திக் சுப்புராஜ்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் மீதான போலீஸ் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இந்தியாவின் இறையாண்மையை காக்க வேண்டும் என்றால் குடியுரிமை சட்ட மசோதா இந்தியாவிற்கு வேண்டாம் என்றும், இந்த சட்டம் இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : earth ,Karthik Subburaj ,
× RELATED விண்ணுக்கு செயற்கைக்கோள்களை...