×

கொருக்குப்பேட்டையில் மழையால் இடிந்த கோயிலை சீரமைக்க ரூ.28 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு நடவடிக்கை

தண்டையார்பேட்டை: பருவமழையினால் கொருக்குப்பேட்டையில் உள்ள பெரியம்மன் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்ததை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பிறகு கோயிலை சீரமைக்க ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். சென்னை கொருக்குப்பேட்டை – எண்ணூர் நெடுஞ்சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமையான ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. மிகவும் சேதமடைந்து காணப்பட்ட கோயிலில் கடந்த 20 நாட்களுக்கு முன் கோயில் பூட்டப்பட்டு, அம்மனை பக்தர்கள் வெளியே நின்றபடி தரிசித்து சென்று வந்தனர். இந்நிலையில், சென்னை நகரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நேற்று முன்தினம் காலை கோயிலின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதைதொடர்ந்து, கோயிலை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. தகவலறிந்ததும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று முன்தினம் மாலை மேற்கூரை இடிந்த அம்மன் கோயிலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதியில் பெரியநாயகி கோயிலின் சீரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்தார். இதைதொடர்ந்து, கோயிலில் வரும் 27ம்தேதி முதல் கட்டுமான பணிகள் துவங்குகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, சென்னை மாநகர மேயர் பிரியா, 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி திமுக செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post கொருக்குப்பேட்டையில் மழையால் இடிந்த கோயிலை சீரமைக்க ரூ.28 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Korkupet ,Minister ,P.M. K.K. Segarbabu ,Kandadarbate ,Periyamman Temple ,Korkupate ,P. K.K. Segarbabu ,Korkukipetta ,B. K.K. Segarbabu ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...