×

மக்கள் பாராட்டு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலூர், மயிலாடு துறை மாவட்டங்களில் கனமழை கொட்டியது. 122 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக 44 செ.மீ., மழை சீர்காழியில் பெய்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தலைநகர் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழையை எதிர்கொள்ள மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பொதுமக்களிடம் முதல்வர் மனுக்களை பெற்றார். கடந்தகால ஆட்சியில் மக்களை பற்றி கவலைப்படாமல் ஆட்சியாளர்கள் இருந்தனர். கடந்த காலத்தில் இயற்கை பேரிடர் உள்பட பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் அடிக்கடி சந்தித்தனர். அதுபற்றி கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை. குறிப்பாக, பாதிப்புக்கு உள்ளான மக்களை நேரிடையாக சென்று, பார்க்கவே கடந்த ஆட்சியாளர்கள் அச்சப்பட்டனர். இதை தற்போதும் மக்கள் மறந்து விடவில்லை என்பதை கடந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வருகிறார். தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக சென்று மக்களை சந்தித்து, நிவாரண உதவிகளை வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், எதிர்கட்சிகள் தாங்கள் இருப்பதை காட்டிக்கொள்ள, வேண்டும் என்றே பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசின் செயல்பாடு குறித்து குறைகூற முடியாததால், இதுபோன்ற வேலைகளில் அவர்கள் இறங்கியுள்ளனர். கடந்தகால ஆட்சியில் மக்களை சந்திக்கவே அச்சப்பட்ட இவர்கள், இன்று மக்கள் நலன் மீது அக்கறை இருப்பது போல் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.மழை காலத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து மிகச் சிறப்பான முறையில் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மழைநீர் உடனே வடிந்து விடுகிறது. ஒவ்வொரு துறைகளும் மேம்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று. வெள்ள பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தமிழக அரசை பாராட்டி வருவது, கடந்த கால ஆட்சியாளர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மக்களை குழப்பும் வகையில், பொய் கூறி வருகின்றனர். நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. மழையை எதிர்பார்த்து, அதிரடி வியூகம் வகுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிக சிறப்பாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மழையால் ஆபத்து வருவதற்கு துளியளவு கூட வாய்ப்பு இல்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post மக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Cuddalore ,Mayiladu ,
× RELATED வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும்...