அஜித்துக்கு ஜோடியாகிறார் யாமி கவுதம்

தமிழில் ராதாமோகன் இயக்கிய கவுரவம் படத்தில் நடித்தவர் இந்தி நடிகை யாமி கவுதம். அந்த படத்துக்கு பிறகு ஜெய் ஜோடியாக தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. தொடர்ந்து இந்தியில் மட்டும் யாமி நடித்து வந்தார். இப்போது மீண்டும் தமிழில் அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நாளை தொடங்குகிறது. இதில் அஜித் ஜோடியாக நஸ்ரியா நாசிம் நடிப்பார் என முதலில் பேச்சு வந்தது. பிறகு பல நடிகைகளின் பெயர் பரிசீலனையில் இருந்தது. பாலிவுட் நடிகை பரினிதி சோப்ராவிடமும் பேசினார்கள். இந்நிலையில் யாமி கவுதம் இதில் நடிக்க தேர்வாகிவிட்டார் என கூறப்படுகிறது.

Related Stories:

>