×

பெல்லி சூப்புலு தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்

தெலுங்கில் விஜய்  தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் ஹிட்டான படம், பெல்லி  சூப்புலு. இதன் தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் உதவியாளர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி., ஹவிஸ் புரொடக்‌ஷன்ஸ் கொன்ரு சத்யநாராயணா இணைந்து தயாரிக்கின்றனர்.

ஒளிப்பதிவு, கிருஷ்ணன் வசந்த். இசை, விஷால் சந்திரசேகர். வசனம், தீபக் சுந்தர்ராஜன். பிரம்மச்சாரியாக இருக்கும் பொறியியல் பட்டதாரி ஹரீஷ் கல்யாண், திடீரென்று திருமண விளையாட்டில் தள்ளப்பட்டு, தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.

Tags : Harish Kalyan ,Priya Bhavani Shankar ,Tamil ,Belle Soupulu ,
× RELATED சாமி, சிங்கம் பாணியில் உருவான ரத்னம்: ஹரி தகவல்