சமந்தாவின் இந்தி சீக்ரெட்

தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் சமந்தா சரளமாக பேசுவார். அவருக்கு இந்தியும் தெரியும் என்ற ரகசியத்தை தற்போது உடைத்திருக்கிறார். சமீபத்தில் மும்பை சென்றிருந்த சமந்தா பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றார். அங்குஅவரிடம் இந்தியில் கேள்வி கேட்டபோது ஆங்கிலத்திலேயே பதில் அளித்தார்.

பின்னர் அவரிடம் இந்தி தெரியாதா என்றபோது இந்தி தெரியும் ஆனால் பேச மாட்டேன். நான் தென்னிந்திய நடிகை. இந்தி பேசினால் அதன் பேச்சு வழக்கு சரியாக இருக்காது என்றார். இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள் என்றபோது வழக்கமான தனது புன்னகையை வீசிவிட்டு நழுவிச் சென்றார்.

Tags : Samantha ,
× RELATED மறைக்கவேண்டிய இடத்தில் டாட்டூ வரைந்த சமந்தா