சீனியர் நடிகைகளுக்கு பை பை

சீனியர் நடிகைகள் அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா போன்றவர்களுக்கு சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்கள் பை பை சொல்லத் தொடங்கி உள்ளனர். நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி படங்களில் தற்போது இளம் நடிகைகளுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன், சூர்யாவின் சூரரை போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி, விஷாலின் துப்பறிவாளன்2ம் பாகத்தில் லவ்லி சிங், விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ், கார்த்தி நடிக்கும் தம்பி படத்தில் நிகலா விமல், தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தில் மெஹரின் நடிக்கின்றனர்.

இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்துக்குத்தான் நடிகை நயன் தாராவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை. முன்னதாக அஜீத் ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியிடம் பேசப்பட்டதாம். ஆனால் அவர் தற்போதைக்கு தென்னிந்திய படத்தில் நடிப்பதாக இல்லை என்று மறுத்துவிட்டாராம்.

Tags : Senior ,Actresses ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி