40 ஆண்டுக்கு பிறகு ரஜினி - கமல் இணையும் படம்

1970களின் ஆரம்பத்தில் தொடங்கி 80கள் இறுதிவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன் பல்வேறு படங்களில் இணைந்து நடித்தனர். அபூர்வ ராகங்கள், ஆடு புலி ஆட்டம். தில்லுமுள்ளு, நட்சத்திரம், நினைத்தாலே இனிக்கும், அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., 16 வயதினிலே போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒரு கட்டத்தில்   இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்று ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டனர்.  இதில் இன்னொரு சீக்ரெட் என்னவென்றால் இருவரும் இணைந்து நடிப்பதென்றால் அது, ஒன்று கமல் தயாரிக்கும் படமாக இருக்க வேண்டும் அல்லது ரஜினி தயாரிக்கும் படமாக இருக்க வேண்டும். மேலும் தனித்தனியாக நடிப்பதற்கு மற்றொரு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

ஒரே படத்தில் நடிக்கும்போது இருவரின் சம்பளமும் கணிசமாக குறைத்து தரப்பட்டது. தனித்தனியாக நடிக்கும்போது அவர்களின் சம்பளமே வேறாக இருந்தது. ரகசிய ஒப்பந்தம் பொருளாதார ரீதியாகவே இருவருக்கும் பெரும் பலனை தந்தது. ரஜினி, கமல் இணைந்து நடிப்பதில்லை என்ற பாலிசியை கடந்த 40 வருடமாக கடைபிடித்து வருகின்றனர். இதற்கிடையில் ஷங்கர் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்க  முயற்சி மேற்கொண்டனர். அது பலன் அளிக்கவில்லை. சினிமாவில் இன்னமும் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்து ரஜினியும் கமலும் இணையில்லா ஹீரோக்களாக நடித்து வருகின்றனர்.

அதேசமயம் இருவருக்கும் அரசியலில் ஈடுபாடும் அதிகரித்திருக்கிறது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிவிட்டார். ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தி ருக்கிறார். திரையுலகுக்கு வந்து 60 வருடம் ஆனதையடுத்து கமலுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது பேட்டி அளித்த ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இணைந்து பயணிக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த இணைப்பின் கூடுதல் அம்சமாக இருவரும் சினிமாவிலும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் 168வது படம் நடிக்கிறார். இதையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அநேகமாக கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும், அதில் ரஜினி ஹீரோவாக நடிக்க கெஸ்ட் ரோலில் கமல் நடிக்கவிருப்பதாக வும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. சமீபத்தில் ரஜினியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேசியது தெரிந்ததே. கமல்ஹாசன் இந்தியன் 2ம் பாகம் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு நடிப்பிலி ருந்து ஒதுங்கி தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா படத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>