×

கவர்ச்சி படம் வெளியிட்ட நடிகைக்கு செம டோஸ்

இந்தியில் முன்னா மைக்கேல் படத்தில் நடித்த நிதி அகர்வால் தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டர் மஞ்சு, ஐஸ்மார்ட் சங்கர் போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இணைய தளத்தில் நிதி அகர்வால் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி படத்தை காணவே இன்ஸ்டாகிராமில் அவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். சமீபத்தில் படுகவர்ச்சி படமொன்றை வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் நிதி அகர்வாலுக்கு செம டோஸ்விட்டார்.

‘நாட்டில் இப்போதே பெண்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. வர வர நிலைமை மோசமாகி வருகிறது. பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கவர்ச்சியான படங்களை வெளியிட் டுள்ளீர்கள். உங்களைப்போன்றவர்களால்தான் சாதாரண பெண்கள் பலாத்காரத்துக் குள்ளாகிறார்கள். உங்களின் அங்கங்களை இதுபோல் வெளிக்காட்டாதீர்கள் என குறிப்பிட்டிருந்தார். அதைக்கண்ட நிதி அகர்வால் அந்த நபருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

‘இந்த நபரின் பேரழிவு சிந்தனையை கண்டு திகைப்பாக இருக்கிறது. உங்களுடைய முகவரியை எனக்கு அனுப்புங்கள் பிங்க் படத்தின் (தமிழில் நேர்கொண்ட பார்வை ரீமேக் ஆனது) பிரதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அது உங்களுக்கு தேவைப்படும். பலாத்காரம் என்பது எல்லா மட்டத்திலும் தவறானது. மற்றவர்கள் செய்யும் தவறுக்காக இன்னமும் பெண்களை குறை சொல்பவர்கள் இருந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்’ என தெரிவித்திருக்கிறார்.

Tags : Sema Toss For Actress ,
× RELATED அக்கரன் விமர்சனம்