×

ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு ஆளுநர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை: டெல்லி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை!

சென்னை : நாட்டின் முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேருவின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் மரியாதை செய்தனர். இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவருமாக இருந்த ஜவர்ஹலால் நேருவின் 134-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேருவின் சிலைக்கு முன்பாக அவரது புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மூத்த அமைச்சர்களான அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்டோர் நேருவின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மாநில பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கட்சி பிரநிதிகள் காதிபாராவில் உள்ள நேருவின் சிலைக்கு முன்பாக உள்ள அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். நவீன இந்தியாவை கட்டமைத்ததில் மாபெரும் பங்குவகித்த இந்தியாவின் மூத்த முன்னோடி தலைவரான நேருவின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்து விதமாகவே இன்று தமிழத்தின் ஆளுநர், மூத்த அமைச்சர்கள் அனைவரும் நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தியுள்ளனர்.    மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முக்கிய தலைவர்கள், மற்றும் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்திகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.    …

The post ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு ஆளுநர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை: டெல்லி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை! appeared first on Dinakaran.

Tags : Jawaharlal Nehru ,Governor ,Ministers ,Sonia Gandhi ,Delhi Memorial ,Chennai ,
× RELATED மக்களை மனதளவில் மாற்ற செய்யும் உத்தி...