×

மோதிரமலை அருகே மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் நோயாளி இறந்த பரிதாபம்

குலசேகரம் : குமரி மாவட்டம்  மோதிரமலை அருகேயுள்ள மலை கிராமம் கோலிஞ்சிமடம். இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. இருக்கிற பாதையில் செல்லுவதற்கு கொம்பை ஆற்றை கடக்க வேண்டும். மழை காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் இங்கு பாலம் கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் அவசர தேவைகளுக்கு சுமார் 3 கிமீ தூரம் நடந்து மோதிரமலை பகுதிக்கு சென்று பின்னர் வாகனங்களில் செல்ல வேண்டும்.இந்த நிலையில்  கோலிஞ்சிமடம் பகுதியை சேர்ந்த வேலு பாண்டியன் (67) சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் நோயால்  அவதி பட்டதால் அப்பகுதியினர் இவரை சுமார் 3 கிமீ தூரம் சுமந்து சென்று பின்னர் தனியார் வாகனம் மூலம் பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வேளு பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.சாலை வசதி இல்லாதது மற்றும் பேச்சிப்பாறை – கோதையாறு சாலை போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் குண்டும் குழிகளாக இருப்பது போன்ற காரணங்களால் குறித்த நேரத்தில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் சாலையை சீமைக்க வேண்டும், கோலிஞ்சிமடத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மோதிரமலை அருகே மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் நோயாளி இறந்த பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Motiramalai ,Kulasekaram ,Kolinchimadam ,Mothiramalai ,Kumari district ,
× RELATED ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை...