×

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை படமாகிறது

உலக அளவில் புகழ்பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். 50வது வயதில் திடீர் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது மார்பு எலும்பு கூடு உடைந்து இறந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் தனது ஆசிரமத்தில் வளர்ந்த குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்தாலும் மைக்கேலின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு முரண்பாடுகளுடன் கூடியதாக அமைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது.

ஏற்கனவே மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையை மையமாக வைத்து, தி ஜாக்சன்ஸ்: ஒரு அமெரிக்கன் கனவு மற்றும் ஃப்ளெக்ஸ் அலெக்சாண்டர் மேன் இன் தி மிரர்: தி மைக்கேல் ஜாக்சன் ஸ்டோரி ஆகிய தொடர்கள் வந்துள்ளன. எதுவும் அவரது வாழ்க்கையை முழுமையாக சொல்வதாக அமையவில்லை.

தற்போது முறைப்படி மைக்கேல் ஜாக்சனின் அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து அனுமதி பெறப்பட்டிருக்கிறது. கிரஹாம் கிங் என்ற தயாரிப்பாளர் அந்த உரிமையை பெற்றுள்ளார். மேலும் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய முக்கிய சாதனங்களையும் பெற்றிருக்கின்றனர். ஜான் லோகன் திரைக்கதை எழுதுகிறார். இவர், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள கிளாடி யேட்டர், தி ஏவியேட்டர் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Michael Jackson ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை