×

அஞ்சலி வாழ்க்கை படமாகிறது

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி நடிப்பில் வெளியான படம், பேரன்பு. இதில் கேரளாவை சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் நடித்தார். ஏற்கனவே சில மலையாளம்  மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் உருவாகும் இதை டினே ஜார்ஜ்  இயக்குகிறார்.

மாடலாக இருக்கும் திருநங்கை ஆணாகவும், பெண்ணாகவும் திரைப்படத்தில் நடிப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் படத்தில் சொல்லப்படுகிறது. அஞ்சலி அமீர் வேடத்தில் அவரே நடிக்கிறார்.

Tags : Anjali ,
× RELATED கர்நாடக போலீஸ் அதிகாரி உட்பட 3 பேரின்...