×

இந்தியில் பேசச் சொல்லி வற்புறுத்தல்; தமிழில் பேசட்டுமா? டாப்ஸி அதிரடி

இந்தியில் பேசச் சொல்லி வற்புறுத்திய நபரிடம் தமிழில் பேசட்டுமா என கேட்டு அதிர வைத்தார் டாப்ஸி. சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற டாப்ஸி, தனது சினிமா வாழ்க்கையை பற்றி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் தனது நடிப்பு அனுபவங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அப்போது டாப்ஸி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து நின்று, ‘டாப்ஸி இந்தியில் பேச வேண்டும்’ என்றார். இதைக் கேட்ட டாப்ஸி, ‘இங்கு இருக்கும் அனைவருக்கும் இந்தி தெரியுமா?’ என கேட்டார். பெரும்பாலானோர் இல்லை என்றார்கள்.

அப்போது அந்த நபர், ‘நீங்கள் இந்தி நடிகை. அதனால் இந்தியில்தான் பேச வேண்டும்’ என்றார். உடனே கோபம் அடைந்த டாப்ஸி, ‘நான் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளேன். தமிழில் பேசட்டுமா?’ என கேட்க, அந்த நபர் வாயடைத்து போனார். நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து டாப்ஸி ஆங்கிலத்தில் தனது பேச்சை தொடர்ந்தார்.

Tags : tamil ,
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு