×

ஒரே வாரத்தில் ரூ.1.28 லட்சம் கோடி காலி; உலக கோடீஸ்வரர் தெருவுக்கு வந்தார்

வாஷிங்டன்: கொரோனா காலகட்டத்தில் கிரிப்டோ கரன்சிகள் வரலாறு காணாத வளர்ச்சியை பெற்றன. அவற்றின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. இதனால் கிரிப்டோவில் முதலீடு செய்த பலரும் பணக்காரர் ஆனார். ஆனால், கிரிப்டோவால் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக பணக்காரர் ஆகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக பணத்தை இழப்போம் என்பதற்கு சாம் பேங்க்மேன் ப்ரைட் சாட்சியாகி உள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர் சாம் பேங்க்மேன் ப்ரைட். தனது 30 வயதில் கடந்த 2019ம் ஆண்டு எப்டிஎக்ஸ் எனும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை நிறுவனத்தை தொடங்கினார். இரண்டே ஆண்டில் அசுர வளர்ச்சி. இவரது சொத்து மதிப்பு ₹2 லட்சம் கோடியை தாண்டியது. இதனால் ப்ளூம்பெர்க்கின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் எஸ்பிஎப் இடம் பெற்றார். இவர் தனது சொத்தில் 70 சதவீதம் வரையிலும் தனது நிறுவனத்திலேயே முதலீடு செய்திருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதமாக கிரிப்டோ சந்தை வீழ்ச்சியால் எப்டிஎக்ஸ் நிறுவனம் சரிவை கண்டது. ஆனாலும் கடந்த திங்கட்கிழமை சாம் பேங்க்மேனின் சொத்து மதிப்பு ₹1.28 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, நிறுவனம் தடுமாற்றம் கண்டதால் அதன் முதலீட்டாளர்கள் திடீரென விலகினர். இதன் காரணமாக ஒரே வாரத்தில் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து விலகிய சாம் பேங்க்மேன் தனது நிறுவனம் திவாலாகி விட்டதாகவும் அறிவித்தார். அவரது எப்டிஎக்ஸ் நிறுவனம் செல்லாக்காசாகி விட்டது. இதனால், ₹1.28 லட்சம் கோடி சொத்தையும் ஒரே வாரத்தில் சாம் பேங்க்மேன் இழந்து விட்டார். உலக வரலாற்றில் இவ்வளவு விரைவாக எந்த நபரும் இவ்வளவு சொத்துக்களை இழந்ததில்லை என ப்ளூம்பெர்க் கூறி உள்ளது. …

The post ஒரே வாரத்தில் ரூ.1.28 லட்சம் கோடி காலி; உலக கோடீஸ்வரர் தெருவுக்கு வந்தார் appeared first on Dinakaran.

Tags : World ,Boundary ,Washington ,Corona ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை...