×

திருமணம் நிச்சயமான இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: தாயின் கள்ளக்காதலனுக்கு வலை

பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி(40). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் இவருடன் இவரது மகள் சங்கீதா(18) சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அம்சவல்லி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் சங்கீதா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மேலும் சங்கீதா அணிந்திருந்த கம்மல், கொலுசு, மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அம்சவல்லி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பூந்தமல்லி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த அம்சவல்லிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜூ (38) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அம்சவல்லியுடன் வசித்து வந்த சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் அம்சவல்லி வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்ற பிறகு, வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன் ராஜூ சங்கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு போன்றவற்றை கொள்ளையடித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி போலீசார் அம்சவல்லியிடம் விசாரித்து வருகின்றனர். …

The post திருமணம் நிச்சயமான இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: தாயின் கள்ளக்காதலனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Amsavalli ,Metuth Street ,Chenneerkuppam ,
× RELATED காவலர், ராணுவ வீரர், குரூப் 4 பணி:...